இன்று (பிப்..,07) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (பிப்..,07) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். இன்று சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும்ஒரு நாள் . நூதன பொருட்சேர்க்கை உண்டு.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று உங்களின் தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி வழித்தகவல் உங்களை ஆச்சர்யமளிக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் எல்லாம் மாறும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று உங்களின் இனிய வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் அகலும் நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் இன்று  ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவதை கண்டு வருத்தமடையலாம்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று தங்களின் நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு நாள். உத்தியோகத்ததில் இன்று  பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். பணப்பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது தான் நல்லது. விரோதங்கள் எதுவும்  வளராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று விவாகப் பேச்சு முடிவாகும் ஒரு நல்ல நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம் மற்றும் வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பணியாளர் தொல்லை இன்று  அகலும். உடல் நலம் சீராகும் மற்றும் குடும்பச்சுமை கூடும்

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று நல்லவர்களை சந்தித்து நலம் காண வேண்டிய ஒரு நாள். வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட தற்போது ஒத்துழைப்பு செய்வர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தபடுத்தும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை வந்து சேரும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றுபிள்ளைகளின் உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறும் நாள். நிகழ்காலத் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

விருச்சக ராசிக்காரர்கள் இன்று நீங்கள் எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த  லாபம் இன்று  உண்டு. மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக்கொண்டு உங்களிடம் வந்து சேர்ப்பர். நேற்றைய பிரச்சினைகளில் ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி எல்லாம் வந்து சேரும் நாள். ஊக்கத்தோடு மற்றும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவாகலாம். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுக்களை எல்லாம்  பெறுவீர்கள்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று முன்னேற்றம் காண முயற்சி எடுக்க வேண்டிய ஒரு நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் எல்லாம் தற்போது ஆதாயத்தைக் கொடுக்கும். இன்று செயலில் வேகம் காட்டுவீர்கள். பயணத்தால் சிறு விரயம் உண்டு. .

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று வளர்ச்சி கூடும் ஒரு நாள். வாங்கல் மற்றும் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற உறவினர்கள் கடைசி நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவுவர். இன்று திடீர் பயணமொன்று உங்களுக்கு லாபத்தை தரும்..

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று  அதிர்ஷ்ட வாய்ப்புகள் எல்லாம் அலைமோதும் ஒரு நாள். வெளிவட்டாரத்தில் உங்களின்  மதிப்பு மற்றும் மரியாதை உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் இன்று நிறைவேறலாம். பெரும் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். வருமானம் இன்று போதுமானதாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்