எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடும் மோடி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் – மு.க.ஸ்டாலின்
எத்தனையோ அறிவிப்புகளை வெளியிடும் மோடி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க நீட் விலக்கு மசோதாவை நிபந்தனையாக அதிமுக முன்வைக்கவேண்டும் .தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் என்ற அரக்கன் கொன்று புதைத்திருக்கிறது.தேர்தல் நெருங்கும் போது வாக்குறுதிகளை அள்ளி விடும் பிரதமர் மோடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தருவாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.