வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் விழா..!வெகுச் சிறப்பாக நடைபெற்றது..!
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவானது கடந்த 31 தேதி முதல் நடைபெற்று வருகின்றது.இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7 நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரம் மற்றும் 21 அடி அகலம் கொண்ட தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
திருத்தேரில் காலை 7 மணியளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு மற்றும் குளக்கரை சாலை, பஜார் வீதி மற்றும் வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேரானது மீண்டும் தேரடியை வந்து அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வருகிற 8 தேதி காலை 10 மணிக்கு திருக்கோவில் வளாகத்தில் உள்ள கோவில் குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது. இந்த விழாவின் கடைசி நாளான 9ம் தேதி இரவு 8மணிக்கு வெட்டிவேர் சப்பரம் வீதி உலா நடைபெறகிறது.