ஓகி புயல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும் இன்னுமும் சில கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரபட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட நிவாரணபணிகள் குறித்தும் வருகிற 7 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.