கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை-கமல்ஹாசன்
மக்கள் தான் தலைவர்கள், நாங்கள் தொண்டர்களாக இருப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், இடைக்கால பட்ஜெட், மத்திய அரசின் சுய தேவைக்கான பட்ஜெட் .அதாவது அரசு தங்களுக்காக தாங்களே தாக்கல் செய்து கொண்ட ஒரு பட்ஜெட் தான் இடைக்கால பட்ஜெட் .இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் எந்த முக்கிய பிரச்சனைகளை குறித்தும், எவ்வித அக்கறையினை காட்ட விரும்பவில்லை என்பது தான் உண்மை.இந்த பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகளை பொருளாதார நிபுணர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள்.கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை, கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மக்கள் தான் தலைவர்கள், நாங்கள் தொண்டர்களாக இருப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.