2016 முதல் 2018 வரை தமிழகத்தில் சாலை விபத்து 20% குறைந்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்
2016 முதல் 2018 வரை தமிழகத்தில் சாலை விபத்து 20% குறைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தளமாக விளங்குகிறது.இந்தாண்டு சுகாதார ஆய்வாளர்கள் 800 பேரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.2016 முதல் 2018 வரை தமிழகத்தில் சாலை விபத்து 20% குறைந்துள்ளது. தமிழகத்தில் 75 இடங்களில் விபத்து காய சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது, இதனால் 25% இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
மேலும் இந்தாண்டு 4 இடங்களில் ரூ.130 கோடி மதிப்பில் விபத்து காய சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.