தனுஷின் படத்திற்கு தயாராகும் மாரி செல்வராஜ்…!
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹலோ ஹாலிவுட்டா ? இங்க இரண்டு ஆஸ்கர் பார்சல் பண்ணுங்க! என குறிப்பிட்டு, இயக்குனரின் புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.