இளையராஜாவுக்காக செய்தது 96 வெற்றி விழாவிற்கு உதவுகிறது!! பார்த்திபனின் நச் டிவீட்!!!
தமிழ் சினிமாவில் கதாசிரியர் இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்ட.மனிதர் பார்த்திபன். இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். இந்த பொறுப்பிலிருந்து திடீரென விலகினார்.
அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்த்திற்கு சில புதுமையான யோசனைகள் அவர் கூறியதாகவும், அதனை நிர்வாகிகள் மறுத்ததாகவும் அதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த பதவியை ராஜினாமா செய்தார் என்றும் செய்திகள் வெளகயாகின.
இதனை தொடர்ந்து நேற்று 96 படத்தின் 100 வது நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட பார்த்திபன் இளையராஜா விழாவிற்கு தைத்த்த சட்டை 96 பட விழாவிற்கு போட வேண்டியதாயிற்று என கூறி, இருக்க ஆசைப்பட்டது ஒன்றாக இருக்க வாழ்க்கை பட்டது வேறு ஒன்றாக அமையும் என கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
DINASUVADU