சபரிமலை விவகாரம்: மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று (பிப்ரவரி 6ஆம் தேதி) விசாரணைக்கு வருகின்றது.
சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.