” அரசு சட்டப்படி பணம் கொடுக்கின்றது ” துரைமுருகன் விமர்சனம்…!!
தமிழக சட்டப்பேரவையில் 110 விதிகளின் படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏழை மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுமென்று அறிவித்தார்.இது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கிடையே பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளது.குறிப்பாக இது தேர்தலுக்காக வழங்கப்படும் பணம் என விமர்சனம் செய்யப்பட்டது.
இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவிக்கையில் , வாக்காளர்களுக்கு சட்டப்படி தமிழக அரசு பணம் கொடுக்கிறது .மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் 6000 ரூபாயை தம்பிதுரையும் இதுபோன்று தேர்தலுக்காக கொடுக்கப்படுகின்றது என விமர்சனம் செய்தார் அதே போல தான் நானும் கூறுகின்றேன்.