ஆஸ்திரேலியாவின் அபார சூறாவளி பந்து வீச்சால்..!இடிந்து போன இலங்கை..!
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து இலங்கைக்கு டிக்ளேர் செய்தது .
அதன் பின்னர் 534 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 215 ரன்னில் ஆல் அவுட் அதிர்ச்சி கொடுத்தது.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது.இதில் 319 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.எனவே இலங்கைக்கு 516 ரன் நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணி நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன் எடுத்து இருந்த நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடந்த நிலையில் வெற்றிக்கு இலங்கை அணிக்கு 499 ரன் தேவை என்ற நிலையில் கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இலங்கை படு உஷாராக தொடர்ந்து விளையாடியது.
ஆனால் அதிர்ச்சி கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி அப்படியே நிலை குலைந்தது.இலங்கை அணி 51 ஓவர்களில் 149 ரன்னில் சுருட்டி வெற்றிக்கு வித்திட்டுக் கொண்டது.
இதனால் ஆஸ்திரேலியா 366 ரன் வித்தியாசத்தில் இலங்கையை அபார வெற்றி பெற்றது.இதில் மெண்டீஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார்.ஆஸ்தி..,பந்து வீச்சாளர் ஸ்டார்க் 5 விக்கெட்டும் மற்றும் கும்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்து அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர்.
டெஸ்டில் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிக அபாரமாக இருந்த நிலையில் டெஸ்ட் தொடரில் மொத்தம் 10 விக்கெட் வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.இதே போன்று பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.