மேற்கு வங்க அரசி கண்டித்து தேர்தல் ஆணையத்தில் புகார்…!!
மேற்குவங்க மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி_யின் தேர்தல் பரப்புரையை மேற்கு வங்க அரசு முடக்கு கின்றது என தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வருகை வந்த உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தயநா_த்தை தரை இறங்க மேற்கு வங்க அரசு மறுத்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பாரதீய ஜனதா கட்சியின் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமைமையில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீத்தாராம் கூறுகையில் , மேற்கு வங்கத்தில் பாரதீய ஜனதா தொண்டர்கள் மிரட்டப்படுகிறார்கள் , எதிர்க்கட்சியினர் அச்சுறுத்தப்படுகின்றார்கள் . நேர்மையான முறையில் தேர்தல் பரப்புரை செய்ய முடியாத சூழல் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்படுகின்றது. இந்நிலையில் நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க வந்துள்ளோம் என்று நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.