படைக்கிறவன் கடவுள்னா…! விதைக்கிறவனும் கடவுள் தான் : கார்த்தி

Default Image

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, ” படைக்கிறவன் கடவுள்னா விதைக்கிறவனும் கடவுள் தான் ” என்று கூறியுள்ளார்கள். எனக்கு போலீஸ்னா பிடிக்கும் அவர் வந்தா சல்யூட் அடிக்கிறோம். அது போல விவசாயிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். விவசாயத்தை மறந்த சமூகம் முன்னேறியதாக சரித்திரமே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நம்முடைய மூத்த உறவுகளிடம் விவசாய நுணுக்கங்களை அவர்கள் இருக்கும் போதே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் போன பிறகு அதனை தெரிந்து கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு இப்பொழுதே உணவு எங்கிருந்து வருகிறது என்று சொல்லி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்