அரசியல் அமைப்பை பாதுகாக்க மம்தா பக்கம் துணை நிற்போம்…ஆந்திர முதல்வர் வேண்டுகோள்…!!
அரசியல் அமைப்பை பாதுகாக்க மம்தா பானர்ஜி பக்கம் துணை நிற்போம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயிடு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்வீட்_டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும் , ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயிடு தனது ட்வீட்_டர் பக்கத்தில் கொல்கத்தாவில் நடக்கும் விவகாரம் மிகவும் கண்டனத்துக்குரியது. அரசியல் அமைப்பை பாதுகாக்க மம்தா பானர்ஜி பக்கம் துணை நிற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
This is shocking and we strongly condemn this. We stand by Chief Minister of West Bengal to preserve and protect constitution and spirit of federalism in the country. #SaveDemocracy
— N Chandrababu Naidu (@ncbn) February 3, 2019