மேற்கு வங்கத்தில் வன்முறை….. மோடி உருவபொம்மை எரிப்பு…!!
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபாடு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் , ரயில் மறியல் போராட்டம் , மோடி உருவ பொம்மை எரிப்பு என தொடர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.