அட… ச்சா… ! இதை பற்றி இவ்வோளோ நாளா தெரியாம போச்சே….!! உடலை தேற்றும் தேற்றாங்கொட்டை…..!!!
நமது அன்றாட பல வாழ்வில் நமது உடல் ஆரோக்கியத்திற்காக பல இயற்கை பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், இறைவன் கொடுத்த இயற்கையில், நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பல பொருட்களை பற்றி அறிந்து கொள்ளவில்லை.
நமது ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களின் தூய்மை மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நாம் உயிர்வாழ்வதற்கு நீர் அவசியமான ஒன்று. இந்த நீரில் தூய்மை இல்லாத காரணத்தாலும் நமக்கு பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நீரை தூய்மைப்படுத்துவதற்கு தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டை பயன்படுகிறது.
தேற்றாங்கொட்டை :
தேற்றாங்கொட்டை கலங்கல் நீரினை தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு. தேற்றாங்கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும், இது நீரை தெளிய வைப்பதாலும் தேற்றான் என அழைக்கப்படுகிறது.
தேற்றாப்பொடி :
தேற்றாங்கொட்டையை பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்து விடும். சங்க காலம் முதல் இன்று இந்த முறை வரை பின்பற்றப்பட்டு வருகிறது. தேற்றாப் பொடிக்கு கதகப் பொடி என்றும் அழைக்கப்படுகின்றது.
நீர் தூய்மை :
பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளை போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமாகிவிடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் மருந்து தயாரிக்கப்படுகிறது.
கண்மாய்களில் தேங்கிய நீரை குடிநீராக மாற்றுவதற்கு இந்த கொட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த கொட்டைகளை பானைகளில் தேய்த்து விட்டு, கம்மாய்களில் தேங்கிய நீரை இதில் ஊற்றி வைத்தால் நீர் சுத்தமாகிவிடும். மேலும் நீரில் மிதக்கும்கருத்துகள் படிந்து விடும்.
பசியை தூண்டும் :
தேற்றாங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியை தூண்டும் ஆற்றல் கொண்டது. பசி எடுக்காதவர்கள் லேகியத்தை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள்.