குறட்டை பிரச்சினையா..? இதனால் வீட்டில் நிம்மதி இல்லையா..? தீர்வு தர கூடிய 5 வழிகள் இதோ..!

Default Image

குறட்டை மிகவும் மோசமான ஒன்று தான். குறட்டை விடுவதால் அவரை விட மற்றவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சில குடும்பத்தில் இதனால் மிக பெரிய பிரச்சினையே கூட உருவாகலாம். இது போல, குறட்டையால் பிரிந்த குடும்பங்களும் இங்கு உண்டு. குறட்டையை பற்றிய பலவித ஆய்வுகளில் சில திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளன.

ஆதாவது, மூன்றில் 1 ஆணும், நான்கில் 1 பெண்ணும் இந்த குறட்டையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி குறட்டையால் அவதிப்படுவோருக்கு தீர்வாக சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

இஞ்சியும் தேனும்
குறட்டை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எளிய வழி உங்களுக்கு உதவும். அதற்கு 1 கப் நீரை கொதிக்க விட்டு அதில் 1 சிறிய துண்டு இஞ்சியை சிறிதாக நறுக்கி போடவும். இதை 5 நிமிடம் குறைந்த வெப்பத்தில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். சற்று நேரம் ஆறிய பின் இதனுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால் குறட்டை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும்.

ஆலிவ் எண்ணெய்
தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் குடித்தால் பலவித நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக தொண்டை பகுதியை இலகுவாக்கி தசைகள் குறட்டையை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்கிறது.

பழங்கள்
உடலில் மெலடோனின் குறைவாக இருந்தால் குறட்டை பிரச்சினை உண்டாகும். இதற்கு தீர்வை தர ஒரு சில பழங்களை சாப்பிட்டால் போதும். மெலடோனின் அளவை அதிகரிக்கும் அண்ணாச்சி, வாழைப்பழம், ஆரஞ்சு முதலிய பழங்களை சாப்பிட்டு வந்தால் குறட்டை சீக்கிரத்திலே குறைந்து விடும்.

சோயா பால்
பால் பொருட்களை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் குறட்டை பிரச்சினை அதிகரிக்க கூடும். ஆகவே இதற்கு பதிலாக சோயா பாலை குடித்து வந்தால் குறட்டை தொல்லை இல்லாமல் வீட்டில் நிம்மதி பிறக்கும். கூடவே சோயா பால் உடலுக்கு அதிக ஊட்டத்தையும் தரும்.

மீன்
சிக்கனை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் குறட்டை பிரச்சினை அதிக அளவில் இருக்க கூடும். காரணம் சிக்கன் சாப்பிடுவதால் தொண்டையின் தசை பகுதி வீக்கம் அடைந்து குறட்டையை அதிகரிக்கிறது. ஆதலால் சிக்கனுக்கு பதிலாக மீன் சாப்பிட்டு வந்தால் குறட்டையை குறைக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்