திருப்பதியில் 10 கோடி மதிப்பிலான 3 தங்க கிரீடம் மாயம்….!!

Default Image

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்த 3 தங்க கிரீடங்கள் மயமாகியுள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணி நடத்தி வருகின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சாமிகளுக்கு தங்கத்தினால் ஆன கிரீடங்கள் அணிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சாமிகளுக்கு அணிவிக்கும் ஆயிரத்து 300 கிராம் எடையுள்ள 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனதாக சொல்லப்படுகின்றது.மேலும் காணாமல் போன தங்க கிரீடத்தை மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என்றும் கணக்கிட படுகின்றது.இது குறித்து தகவலறிந்து வந்த தேவஸ்தான உயர் அதிகாரிகள், நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிரீடங்கள் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து காவல்துறையிடம் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் காணாமல் போன கீரிடம் குறித்து போலீசார், எஸ்.பி. அன்புராஜன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.மேலும் டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைநடைபெற்று வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்