ஐசிசி – ஒருநாள் முதலிடத்தை முத்தமிட்ட முத்தான இந்திய முத்து..!
மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த வெளியிட்டில் இந்திய மகளிரணியின் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தானா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 2018 ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இரு சதமும் 8 அரைசதங்கலும் அடங்கும்.மேலும் இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 2ம் இடம் மற்றும் மேக் லேனிங் 3வது இடமும் பிடித்துள்ளனர். நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4வது இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான மிதாலி ராஜ் 5ம் இடத்தில் உள்ளார்.
பவுலிங்கில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி 4வது இடத்தில் உள்ளார்.அதே போல பூனம் யாதவ் 8வது இடத்திலும் மற்றொரு வீராங்கனையான தீப்தி ஷர்மா 9வது இடமும் பிடித்துள்ளனர்.