வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்படும் ஆவின் பால்…..விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்…!!
சிங்கப்பூர் மற்றும் கத்தார் நாடுகளுக்கு ஆவின் பால் விற்பனையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள ஆவின் பால் தமிழகமட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.இந்நிலையில் தமிழக அரசின் ஆலோசனைப்படி கூடுதலாக சிங்கப்பூர் , ஹாங்க்காங் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆவின் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழக ஆவின் பால் கத்தார் நாட்டுக்கு விற்பனை செய்யும் பணியை தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார்.இதில் ஆவின் பாலக நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.