நிலமற்ற ஏழை கூலி தொழிலாளிகளை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை- திருமாவளவன்
நிலமற்ற ஏழை கூலி தொழிலாளிகளை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்ததால் பாஜகதான் அச்சத்தில் உள்ளது.நிலமற்ற ஏழை கூலி தொழிலாளிகளை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதவில்லை .மத்திய அரசின் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளுக்கு மக்கள் மயங்கமாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.