இன்று (பிப்..,02) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (பிப்..,02) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தெய்வீகச் சிந்தனை இன்று மேலோங்கும். மேலும் நேற்றைய பிரச்சினை இன்று ஒரு நல்ல முடிவிற்கு வரும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று விரயங்களால் மன அமைதி குறைகின்ற நாள். இன்று எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் வந்து காத்திருக்கும்.தங்களின் வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது தான்   நல்லது.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று மிதுன ராசிக்காரர்கள் ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய ஒரு  நாள். புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும்.  துணிவும் மற்றும் தன்னம்பிக்கையும் தங்களுக்கு கூடும். திருமணப் பேச்சுக்கள் எல்லாம் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது.உங்களின் பணத்தேவைகள் அதிகரிக்கும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று தங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்த்து கொள்ளலாமா என்ற எண்ணம் உருவாகும். பகை ஒன்று நட்பாகலாம். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் இன்று வந்து சேரும். அயல்நாட்டு முயற்சிகள் அனுகூலம் தரும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று நீங்கள் சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் ஒரு நாள். தனவரவு திருப்தி தரும். மேலும் நூதனப் பொருட்களை எல்லாம் வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியானது வெற்றி தரும். .

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று கன்னி ராசிக்காரர்கள் சிவாலய வழிபாட்டினால் சிறப்பினைக் காண வேண்டிய ஒரு நல்ல நாள். மதிப்பு மற்றும் மரியாதை உயரும்.உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.சுபகாரியப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவாகும். எதிர்பாராத விதத்தில் வரவுகள் இன்று வந்து சேரும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று துலா ராசியினர் வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த முயற்சியானது  இப்பொழுது தங்களுக்கு வெற்றியை தரும்.தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது  குறித்து சிந்திப்பீர்கள்..

விருச்சக ராசிக்காரர்கள்:

 

Image result for விருச்சகம் ராசி LOGO

விருச்சக ராசிக்காரர்கள் இன்று நந்தீஸ்வரர் வழிபாட்டினால் நலம் காண வேண்டிய ஒரு நாள். நீங்கள் தொட்டது துலங்கும். தனவரவு தாராளமாக வந்து சேரும் ஒரு நாள். தங்கள் பேச்சில் கனிவு பிறக்கும். வீட்டுத்தேவைகளை எல்லாம்  பூர்த்தி செய்து கொள்ள இன்று முன்வருவீர்கள்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகி செல்லும் ஒரு நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தை இன்று கடைப்பிடிப்பது நல்லது. விரதம் மற்றும்  வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் எல்லாம் அகலும்..

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று விரயங்கள் ஏற்படாதிருக்க மகர ராசிக்காரர்களுக்கு விழிப்புணர்ச்சி தேவைப்படும் ஒரு நாள். பணம் பைக்கு வந்த நிமிடங்களிலேயே  செலவாகும். தொழில் முயற்சிகளில் புதியவர்களால் சில பிரச்சினை ஏற்படும் அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது  தான் நல்லது.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று நல்லவர்களின் நட்பால் நலம் காணுகின்ற ஒரு நாள்.இன்று பொருளாதார விருத்தி அதிகரிக்கும்.குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையலாம்..

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் ஒரு நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளைத் தொடருவது பற்றி  இன்று  சிந்திப்பீர்கள். இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்