உடல் உறுப்பு தானத்தில் எந்த முறைகேடுகளும் இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்
உடல் உறுப்பு தானத்தில் வெளிப்படைத்தன்மையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கும் வகையில் 75 இடங்களில் ரூ190 கோடி செலவில் அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளது.
உடல் உறுப்பு தானத்தில் வெளிப்படைத்தன்மையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. இதில் எந்த முறைகேடுகளும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.