இச்சாதாரி நாகங்களாக மூன்று ஹீரோயின்கள்! ஒரே ஹீரோவாக ஜெய்!! மிரட்டும் நீயா-2 ட்ரெய்லர்!!!
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. இப்படம் பேய் படமாக உருவாகி இருந்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெகு நாட்களுக்கு பிறகு தயாராகி உள்ளது.
இந்த படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் வரலெட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரேஷா, ராய் லட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாகவும் இச்சாதாரி நாகங்களாகவும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் திகில் கலந்த ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU