” இந்த பட்ஜெட் வெறும் ட்ரைலர் தான் ” பிரதமர் அதிரடி…!!
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தது வெறும் ட்ரைலர் மட்டுமே என்று பிரதமர் மோடி, தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் மக்களவை தேர்தலுக்கு பின் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வோம் , இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் நலனும் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் , ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்த அரசு நிறை வெற்றிள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் இந்த இடைக்கால பட்ஜெட் வெறும் ட்ரைலர் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.