” இது இடைக்கால பட்ஜெட் அல்ல ” பொய் சொல்லி ” முழு பட்ஜெட் ” தாக்கல்..ப.சிதம்பரம் விமர்சனம்…!!
இடைக்கால பட்ஜெட் என்று கூறி விட்டு முழு பட்ஜெட்டையும் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.மேலும் அவர் கூறுகையில் இடைக்கால பட்ஜெட் குறித்து கூறிவிட்டு., பாஜக அரசு முழுபட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.