சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கும் நெஞ்சுவலிக்கு புல் ஸ்டாப்….!!!!
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக நெஞ்சுவலி கருதப்படுகிறது. முதியவர்கள் மட்டும் தான் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், சிறியவர்கள் கூட இந்த பாதிப்பை உணருவதாக தெரிவிக்கின்றனர். நெஞ்சுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
நெஞ்சுவலி என்றால் என்ன? :
நெஞ்சுவலி என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது இதயத் திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்துவிடும். ஆனால் உழைப்பு அதிகமாகும் போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது.
இதனால் இதயத் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரல் தான் நெஞ்சு வலியாக கருதப்படுகிறது.
தடுக்கும் முறைகள் :
மது பழக்கம் :
இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி உள்ளனர். பெரும்பாலான பெண்களும் கூட போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் பான்மசாலாவை பயன்படுத்துதல் போன்ற பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.
உடல் எடை :
இன்றைய நாகரீகமான உலகில் உணவு முறைகளில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இயறக்கையான உணவுகளை தவிர்த்து செயற்கையான, நச்சு தன்மை வாய்ந்த உணவுகளை உண்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் அதிகமானோரின் உடல் எடை அதிகரித்து, பல நோய்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நெஞ்சுவலி ஏற்படுவதற்க்கும் காரணமாக அமைகிறது. இந்த உணவு முறைகளை மாற்றினால் நெஞ்சுவலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி :
தினமும் காலையில் எழுந்த உடன் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. இது உடல் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. நடைப்பயிற்சி, யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும் போது நெஞ்சுவலி ஏற்படும் அபாயம் குறைகிறது.
கொழுப்பு :
நமது அனுதின உணவுகளில் நாம் நமது உடலுக்கு சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதுண்டு. ஆனால் சத்தான உணவுகள் நமது நாவுக்கு ருசியாக தெரிவதில்லை.
நமது உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகள் தான் நமக்கு ருசியாக தெரியும். உணவில் அடிக்கடி கொழுப்பு சத்துள்ள உணவுகளை சேர்ப்பாதை தவிர்க்க வேண்டும் அவ்வாறு தவிர்க்கும் பொது நெஞ்சுவலி ஏற்படுவதில் இருந்து தப்பலாம்.
மன அழுத்தம் :
நாம் எப்பொழுதும் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும். அதன் முடிந்த பிரச்சனைகளை நினைத்து யோசித்து, மன அழுத்தத்தோடு இருக்க கூடாது. மன அழுத்தம் நெஞ்சுவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணம். எனவே மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
ஓய்வும் உறக்கமும் :
ஒவ்வொரு மனிதனும் சராசரியாக 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். மனித வாழ்க்கைக்கு உறக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த உறக்கம் குறைவுபடும் போது தான் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உழைக்கின்ற மனிதனுக்கு ஒய்வு மிக அவசியமான ஒன்று. இந்த ஒய்வு இல்லாதவர்களுக்கும் பல நோய்கள் ஏற்படும். எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஓய்வும், உறக்கமும் மிக முக்கியமான ஒன்று.