நமது உடலில் அதிகரிக்கும் உப்புசத்தை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்….!!!!

Default Image

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று ஒரு பழமொழி. இன்று நமது சமயலறையில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது உப்பு தான். அனைத்து உணவுகளிலும் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு என்பது உணவுக்கு சுவையை அளிக்க கூடிய ஒன்று. இந்த உப்பை நாம் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.

Related image

 

நமது உடலிலும் உப்புச்சத்து என்பது உண்டு. ஆனால் அது அதிகமாகவும் கூடாது, குறையவும் கூடாது. இந்த உப்புச்சத்து நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த உப்பு சத்தின் அளவு அதிகரிக்கும் போதோ, அல்லது குறையும் போதோ அது நமது சிறுநீரகத்தை பாதிக்கும். முதலில் சிறுநீரகத்தை பாதிக்கும், அதன் பின் இந்த நிலை நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும்.

உப்பு சத்து என்றால் என்ன? :

Related image

உப்புச்சத்து என்பது நமது உடலில் இருக்கக் கூடிய உப்பின் அளவை விட அதிகமாக இருப்பதே உப்புச்சத்து என்கிறோம். இந்த உப்பு சத்தின் அளவை சரியான அளவில் பராமரிப்பதே நல்லது. உடலில் அதிகளவு உப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக தாகம் எடுக்கும்.

உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் :

பழங்கள் மற்றும் காய்கறிகள் :

உப்புச்சத்து அதிகமாக உள்ளவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இது அவர்களது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இது நமது உடலில் உள்ள பெலவீனங்களை நீக்கி உடலுக்கு உறுதியை அளிக்கிறது. உணவுகளை சாப்பிடும் போது, உப்பை குறைத்து சாப்பிட வேண்டும்.

Image result for உப்பு சத்து

பாட்டிலில் விற்பனையாகும் பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அந்த உணவு பொருட்கள் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க சோடியம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

ஊறுகாய் :

ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் உப்பு போட்ட நொறுக்கு பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடலில் அதிக அளவில் உப்பு, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேறி விட்டால், அதனை ஈடு செய்வதற்க்காக சிறிதளவு உப்பு கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Image result for ஊறுகாய் :

உடலில் உப்பு குறைந்தால் தண்ணீர் வற்றிய நிலைக்கு நமது உடல் வந்துவிடும். அப்போது வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையை போக்க அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்