மகாத்மா காந்தியின் நினைவு தினம்:முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாடு முழுவதும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.காந்தி நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து காந்தியின் உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.