தொடர் வேலை நிறுத்தம்!!!முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுகிறது !!
பிப்ரவரி 1 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தொடர் வேலை நிறுத்தம், முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுகிறது என்று தலைமைச்செயலக பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
பின் ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் தலைமைச்செயலக அரசு பணியாளர்கள் சங்கத்தின் தொடர் வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனால் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில், தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அதேபோல் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 1 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தொடர் வேலை நிறுத்தம், முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுகிறது என்று தலைமைச்செயலக பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.தொடர்ந்து போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தப் போவது இல்லை என்றும் அறிவித்துள்ளது.