வாழ்வில் நன்றியுள்ள மனிதனாக இருக்க வேண்டியது அவசியமா?
வாழ்வில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனித்தன்மை கொண்டு வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டியது அவசியம். மனிதர்கள் தங்களுக்கென தனித்தன்மையுடன் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே போல் நன்றியுணர்வு, மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டியதும் மிகவும் அவசியம்.
எந்த உணர்வு இல்லாவிடினும், நன்றியுணர்வு கட்டாயம் மனிதனிடத்தில் இருக்க வேண்டும் என்று வள்ளுவரும் கூறிச்சென்றுள்ளார். இந்த பதிப்பில் மனிதர்கள் தங்கள் வாழ்வில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமா என்று படித்து அறியலாம், வாருங்கள்!
சக்தி அதிகம்..!
சாதாரணமாக அல்லது தான் தோன்றி தனமாக வாழ்க்கையை வாழுவதை விட, ஒவ்வொருவரும் தனது பிறப்புக்கான அர்த்தத்தை தேடும் வண்ணம் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அவ்வாறு பயணிக்கும் வாழ்க்கை பயணத்தில், நம்முடன் வரும் நபர்கள் ஏதேனும் உதவி புரிந்திருந்தால், நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும்.
ஒருவர் செய்த உதவியின் மீதான நன்றி விசுவாசம் கொண்டவரால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடியும்; அப்படிப்பட்டவர்களுக்கு நிம்மதி எனும் பெரும் சக்தி கிடைக்கும் என்று சில மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்படுகிறது.
பாராட்டுங்கள்
நன்றி உணர்வு என்பது எல்லோருக்கும் அவசியம்; ஒருவர் செய்த சிறு உதவிக்கும் நன்றி தெரிவியுங்கள். அவர் அந்த உதவியை செய்திராவிட்டால், என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள், அப்பொழுது நன்றியுணர்வு தானாய் தோன்றிவிடும்.
மேலும் உதவி செய்தவருக்கு நன்றி செலுத்துவதோடு நில்லாமல், அவரின் உதவிக் குணத்தை பாரட்டுங்கள், இதனால் அவர் இன்னும் பல உதவிகளை பலருக்கு புரிவார். இந்த அனைத்து விஷயங்களும் நிகழ வேண்டுமானால் ஒருவர் தனது இதயத்தில் நன்றி உணர்வு கொண்டிருத்தால் மட்டுமே முடியும்.
பழகுங்கள்!
உங்களுக்கு அந்த பழக்கம் இல்லாமல் இருந்தால், அந்த குணம் உள்ள நபர்களுடன் பழகத் தொடங்குங்கள்; நாள்பட்ட உங்கள் சிநேகமே நன்றி என்னும் உணர்வை உங்களுக்குள் கொண்டு வந்து விடும்.