உங்களின் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக்க கூடிய 5 தினசரி செயல்கள்!
இதயம், மூளை, கண் போன்ற முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்திற்கு எந்தவித கோளாறும் ஏற்படாத வரை எல்லா உறுப்புகளும் நல்ல முறையில் செயல்படும். சிறுநீரகம் தனது செயல் திறனை நிறுத்தி கொண்டால் பல்வேறு உறுப்புகள் அதன் செயல்பட்டை நிறுத்து கொள்ளும்.
இதனால் உங்களுக்கு மரணமே கிட்டும். சிறுநீரகம் பாழாக நாம் செய்ய கூடிய தினசரி செயல்கள் தான் காரணம். அந்த 5 வகையான செயல்களையும் இனி அறிவோம்.
அறிகுறிகள்
சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு சில அறிகுறிகளை வைத்து கண்டு பிடிக்கலாம். சிறுநீர் தடைபடுதல், சிறுநீரகத்தில் வலி, சிறுநீரகத்தில் இரத்தம் வடிதல், சிறுநீர் பாதையில் எரிச்சல் முதலியவை அறிகுறியாக தென்படும்.
உப்பு
உணவில் அதிக அளவு உப்பு சேர்த்து கொள்வோருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். அதிக அளவு சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தை பாதிக்கும். ஆதலால், உப்பின் அளவை குறைத்து கொள்ளுங்கள்.
இறைச்சி
அசைவ பிரியர்கள் பலருக்கும் இந்த பாதிப்பு இருக்க கூடும். அதாவது, இறைச்சி பெரும்பாலான அளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்காகும். இவை சிறுநீரகத்தின் திறனை பாதித்து ஆபத்தான நிலைக்கு தள்ளி விடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இன்றைய கால கட்டத்தில் நாம் சாப்பிட கூடிய பல்வேறு உணவுகள் இந்த வகையை சேர்ந்ததாகவே உள்ளது. இதனை தவிர்க்கவில்லை என்றால் சிறுநீரக கற்கள் உருவாதல், எலும்புகளுக்கு சேதம், புற்றுநோய் அபாயம் முதலிய ஏராளமான பிரச்சினைகள் ஏற்படும்.
நீர் பற்றாக்குறை
எல்லா ஜீவ ராசிகளுக்கும் நீர் தான் முதல் ஆதாரம். உடலில் நீர்சத்து குறைந்தால் சிறுநீரக கோளாறுகள் உண்டாகும். நீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் மற்ற உறுப்புகளும் அதன் செயல் திறனை குறைத்து கொள்ளும். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
மது பழக்கம்
மது பழக்கம் கொண்டோருக்கு பெரும்பாலும் சிறுநீரக பிரச்சினைகள் இருக்கும். மது பழக்கம் எப்படி பல வித நோய்களை உண்டாக்குகிறதோ அதே போன்று சிறுநீரக கோளாறையும் தருகிறது. எப்படி இருந்தாலும் இது மரண வாசலை தட்டி விட்டு தான் செல்லும்.