விஸ்வாசம் வெற்றி கொண்டாட்டத்தில் ஏழைகளுக்கு உணவளித்த மலேசிய தல ரசிகர்கள்!!
தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். சத்ய ஜோதி.பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து குடும்ப படமாக உருவானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் வெற்றியை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விஸ்வாசம் படத்தின் வெற்றியை மலேசியா தல ரசிகர்கள் மலேசியாவில் 80 ஏழைகளுக்கு உணவளித்து தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
DINASUVADU
#Viswasam Movie Success Celebration By Malaysia #Thala Fans , Giving Food Donation For 80 People. ???? pic.twitter.com/nwKxDBBQOv
— MALAYSIA AJITH FAN CLUB (@Thalafansml) January 29, 2019