தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு!!! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் நாளை கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது.அதில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.