திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமக்கள் மறவாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!

Default Image

திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமக்கள் தங்கள் திருமண வேலைகளின் பொழுது எந்த ஒரு விஷயத்தையும் மறந்து விடாமல் இருக்க வேண்டியது அவசியம்; ஏனெனில் வாழ்வின் மிக முக்கியமான நிலை மற்றும் நிகழ்வு என்பது திருமணம் ஆகும். இந்த நிகழ்வின் பொழுது அனைத்து உற்றார், உறவினர், நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரையும் அழைத்து அனைவரின் ஆசியையும் பெற்று மணவாழ்வை அமைப்பது மிகவும் அவசியம்.

இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வின் பொழுது மணமக்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம்.

பணத்தேவை

திருமணம் என்றால் சாதாரண விஷயம் இல்லை; பற்பல வேலைகள் இருக்கும், அவற்றை செய்து முடிக்கும் நபர்களுக்கு கூலி கொடுக்க வேண்டியிருக்கும். வாங்க வேண்டிய பொருட்கள், கொடுக்க வேண்டிய பொருட்கள் என எத்தனையோ விஷயங்களுக்கு பணத்தேவை ஏற்படும். திருமணத்தைத் திட்டமிடும் பொழுது, அனைத்து கோணங்களையும் அலசி ஆராய்ந்து அதற்கேற்ற அளவு பணத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அழைப்பு

உறவுகளை, நண்பர்களை, தெரிந்த மற்றவர்களை அழைக்கும் பொழுது யார் பெயரும் விட்டுப் போய் விடாமல் அனைவரையும் நிச்சயமாக அழைத்தல் வேண்டும். ஏனெனில் யாரேனும் ஒருவர் பெயரை நீங்கள் மறந்து போய் அழைக்காமல் விட்டுவிட்டாலும் உறவில் விரிசல் விழ நேரிடலாம்; ஆகையால், உறவுகளை அழைக்க பட்டியல் ஒன்றை தயாரித்து, அதன்படி எல்லோரையும் அழைக்கவும்.

மண்டபம்

திருமணத்தை நடத்த திட்டமிட்டிருக்கும் தளத்தை முன்பே பதிவு செய்து, அந்த இடத்தை தக்க வகையில் அலங்கரித்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்திட வேண்டியது அவசியம்.

திருமண ஆடை அணிகலன்கள்

மணமக்கள் தங்களுக்கான ஆடை அணிகலன்களை சரியான முறையில் தேர்வு செய்து, அதை சரியான அளவில் தங்களுக்கு பொருந்துமாறு தைத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி அனைத்தையும் தயார் நிலையில் வைப்பது கடைசி நிமிட பதற்றத்தைக் குறைக்கும்.

வேலையாட்கள்

திருமண பணிகளை முக்கியமாக உணவு சமைக்கும் பணிகளை செய்ய நியமிக்கும் வேலையாட்கள் சரியாக, திறம்பட தங்கள் வேலைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பு செய்து முடிப்பார்களா என்பதை நிச்சயித்து பணிக்கு அமர்த்தவும்; அவர்கள் பணியை எப்பொழுதும் மேற்பார்வையிட்டு தவறு ஏதும் நேராமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த மேற்பார்வை பணியை உங்களால் முடியாவிட்டால், உறவினர் அல்லது நண்பர்களில் யாரையேனும் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.

வானிலை

திருமண தினத்தன்றும், திருமணத்திற்கான முக்கிய சடங்குகளின் தினத்தன்றும் வானிலையால் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, வானிலை நிலைகள் அனைத்தையும் ஆராய்ந்து, தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். இது நிகழ்வு சுபமாக நடந்தேற உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்