இளம் வயதில் வெள்ளை முடி வந்தால் அதை எப்படி கருமையாக்குவது..? வழிமுறைகள் உள்ளே…
முடி என்பது பலரால் நேசிக்கப்படும் முக்கியமான ஒன்றாகவே பல காலமாக உள்ளது. நம் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி அதை நினைத்து வருந்துகிறோமோ அதை விட பல மடங்கு அதிகமாகவே நம் முடியில் ஏற்பட கூடிய பாதிப்பை நினைத்து நாம் வருந்துவோம்.
குறிப்பாக இளம் வயதிலே நம் முடிகள் அனைத்துமே வெள்ளையாக மாறினால் அவ்வளவு தான். இளநரையை கருமையாக்க நம் வீட்டிலுள்ள பொருட்களே சிறந்ததாம். இனி, நரையை தடுக்க கூடிய சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் நாம் அறிவோம்.
கருவேப்பில்லை
முடியை கருமையாக மாற்ற ஒரு எளிய வழி தான் இந்த கருவேப்பில்லை முறை. கருவேப்பில்லை இலைகளை 1 கைப்பிடி எடுத்து கொண்டு, 1 கப் தேங்காய் எண்ணெய்யில் 8 நிமிடம் வரை கொதிக்க விடவும். அதன் பின்னர் இதனை குளிர வைத்து, வடிகட்டி பின் தலைக்கு தினமும் தடவி வரலாம். தொடர்ச்சியாக இதை தடவி வந்தால் முடி கரு கருவென மாறும்.
ஆலிவ் எண்ணெய்
இளம் நரையை எளிதாக போக்க கூடிய தன்மை ஆலிவ் எண்ணெய்யிற்கு உள்ளதாம். வாரத்திற்கு 3 முறை ஆலிவ் எண்ணெய்யை தடவி வந்தால் வெள்ளை முடி மிக சீக்கிரத்திலே கருமையாக மாறி விடும்.
வெங்காயம்
முடியை கருமையாக மாற்றும் திறன் வெங்காயத்திற்கு உள்ளதாம். 2 ஸ்பூன் வெங்காய சாற்றையும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து தலைக்கு தடவவும். 5 நிமிடம் நல்ல மசாஜை தர வேண்டும். பின்னர் 30 நிமிடம் கழித்து தலையை நீரில் அலசலாம். இந்த முறை உங்களின் வெள்ளை முடிக்கு விடுதலை தரும்.
கடுகு எண்ணெய்
அதிக ஆரோக்கியம் நிறைந்த எண்ணெய் வகையில் கடுகு எண்ணெய்யும் ஒன்று. உடல் ஆரோக்கியத்துடன் முடியின் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. 3 ஸ்பூன் கடுகு எண்ணெய்யை எடுத்து தலையின் அடிவேரில்இருந்து நுனி முடி வரை தடவி கொள்ளவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் காலையில் தலையை அலசலாம்.
நெல்லியும் பாதமும்
முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் மாற்றுவதற்கு இந்த குறிப்பு உதவும். 2 ஸ்பூன் நெல்லி சாற்றுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வந்தால் கூடிய விரைவில் வெள்ளை முடிகள் கருமையாக மாறும்.