400,00,00,000 ஆண்டுகளுக்குள் முன்புள்ள பூமி பாறை சந்திரனில் கண்டுபிடிப்பு….!!
400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்த பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்சானிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா விஞ்சானிகள் அப்பல்லோ திட்டத்தின் மூலம் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் மனிதர்களை சந்திராயனில் தரையிறக்கியபோது , அதாவது
1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நிலவுக்கு பயணித்து 33 மணிநேரம் வரை நிலவில் செலவிட்ட அப்போலோ 14 விண்கல விஞ்ஞானிகள், சுமார் 43 கிலோ எடை கொண்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பினர்.
இந்நிலையில் அந்த விண்கல்லை தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த பாறை சுமார் நானூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பாறை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமி , சந்திரன் மோதும் போது சந்திரனில் விழுந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.