அரசின் நிலைப்பாட்டால் தான் போராட்டம் தொடர்கிறது- ஜாக்டோஜியோ
அரசின் நிலைப்பாட்டால் தான் போராட்டம் தொடர்கிறது என்று ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.7-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சிறையில் இருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை விடுவிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோரிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொள்கிறது .பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்.ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திதீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் . அரசின் நிலைப்பாட்டால் தான் போராட்டம் தொடர்கிறது என்று ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.