ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு ஆதரவு!!! பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்!!!
ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் தலைமைச்செயலக அரசு பணியாளர்கள் சங்கத்தின் தொடர் வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.7-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பிப்ரவரி 1 -ஆம் தேதி முதல் தலைமைச்செயலக அரசு பணியாளர்கள் சங்கத்தின் தொடர் வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.