‘பேரன்பு’க்காக மம்முட்டியை மனதார பாராட்டிய நிவின் பாலி!!
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக மம்முட்டியை கதாநாயகனாக வைத்து ‘பேரன்பு’ எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தினை மலையாள முன்னனி நடிகர் நிவின் பாலி பாரத்துவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் மம்முட்டியையும், படத்தையும் புகழ்ந்து பாராட்டி எழுதியுள்ளார்.
அதில், பேரன்பு ஓர் அழகான திரைப்படம், முகபாவனைகளும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளும் கட்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. இது மம்முட்டியின் சிறந்த நடிப்புக்கான படம். இதனால் தான் அவரை லெஜன்ட் என்கிறார்கள் என கூறினார். மேலும், சாதனா, அஞ்சலி ஆகியோரும் நன்றாக நடித்து இருந்தனர். என குறிப்பிட்டிருந்தார்.
DINASUVADU