இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை!! ஐசிசி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதித்துள்ளது ஐசிசி.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசிய அம்பட்டி ராயுடுவின் பந்துவீச்சு தவறான முறையில் இருப்பதாக ஐசிசி தெரிவித்தது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், அவர் பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரிக்கும் மேலாக செல்கிறது, எனவே அவரது பந்து வீச்சு ஆட்டத்திற்கு முரணாக உள்ளது.
மேலும் அடுத்த 14 நாட்களுக்குள் ஐசிசியின் பிரத்தியோக தளத்தில் சென்று அவரது சுழற்பந்துவீச்சை வீசி காட்ட வேண்டும். அது அங்கு சரி செய்யப்பட்டால் அவர் பந்துவீச அனுமதிக்கப்படுவார். இல்லை எனில் அவர் சில காலம் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
JUST IN: Ambati Rayudu has been suspended from bowling in international cricket.
Details ????https://t.co/n400JyZJdf pic.twitter.com/0QUfFfmnUs
— ICC (@ICC) January 28, 2019
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதித்துள்ளது ஐசிசி.ஏற்கனவே உள்ளூர் போட்டிகளின்போது இதேபோன்று அம்பட்டி ராயுடு அதற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது