குறைந்து வரும் பாலின வீகிதம்….!!
இந்தியாவில் கடந்த 10 வருடங்களாக பாலின வீகிதம் குறைந்து வருகின்றது.
தமிழக உட்பட தென்மாநிலங்களில் ஆண்களுக்கு இணையாக பிறக்கும் பெண்களின் பாலின வீகிதம் குறைந்து வந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்களின் படி அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெளியான விவரத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1000 ஆண்களுக்கு 935 பெண்கள் என்ற வீகிதம் பிறப்பு விகிதம் இருந்தது. ஆனால் 2016ஆம் ஆண்டு இந்த வீகிதம் 840_ஆக குறைந்துள்ளது.அதே போல கர்நாடகாவில் 1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் என்ற பிறப்பு வீகிதம் தற்போது 896 ஆக குறைந்துள்ளது.அதே போல் ஆந்திரா மாநிலத்தில் 974 _ஆக இருந்த வீகிதம் 806 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒடிசாவில் 919_ஆக இருந்த பிறப்பு விகிதம் 858 ஆக குறைந்துள்ளது. இந்த புள்ளி விவரத்தில் கேரள மாநிலம் தவிர்த்து தென் மாநிலங்களில் பாலின வீகிதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்து வருகின்றது.