மோடியை அசிங்கப்படுத்திய H.ராஜா…..பிஜேபி_க்கு வந்த சோதனை…..2100 கோடியை 21,000 கோடியாக மாற்றிய H.ராஜா…!!
பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை h.ராஜா தவறாக மொழி பெயர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மதுரையில் உள்ள தோப்பூரில் சுமார் 1,264 கோடியில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.பின்னர் மதுரையில் நடைப்பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் பொது கோட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி.
அந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசினார்.மோடி பேசியதை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் H.ராஜா மொழிபெயர்த்தார்.அப்போது பிரதமர் மோடி பேசுகையில் ராமேஸ்வரத்தையும் , பாம்பனையும் தனுஷ்கோடியுடன் இணைக்கும் திட்டத்திற்கு 2100 கோடி அரசு ஒதுக்கியுள்ளது என்று பிரதமர் பேசினார்.
இதற்க்கு தமிழில் மொழிபெயர்த்த H.ராஜா 21,000 கோடி என்று தவறாக மொழிபெயர்த்தார்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா கலந்து கொண்டு பேசிய பொதுக்கூட்டத்தில் சொட்டுநீர் பாசனம் என்பதற்கு பதிலாக சிறுநீர் பாசம் என்று பேசியது குறிப்பிடத்தக்கது.