சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்..!
உடலில் இருக்க கூடிய உறுப்புகளில் மிக முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். குறிப்பாக சிறுநீரகத்தில் உருவாக கூடிய கற்கள் தான் சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடிய தன்மை வாய்ந்தவை. இந்த கற்கள் உருவாகாமல் தடுக்க வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன பொருட்கள் என்பதை இனி பார்ப்போம்.
சிட்ரஸ் உணவுகள்
நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் அதிக அளவில் சிட்ரஸ் உள்ள உணவுகளை எடுத்து கொண்டால் சிறுநீரக கற்களை தடுத்து விடலாம். குறிப்பாக ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் புரூட் போன்றவை கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
ஜுஸ்
சிறுநீரக கற்களை இந்த வகை ஜுஸை வைத்து தடுத்து விடலாம். கோதுமை புல், செலரி, எலுமிச்சை, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை ஜுஸ் போன்று தயாரித்து குடித்து வந்தால் சிறுநீரக கற்களின் அபாயம் குறையும்.
கிட்னி பீன்ஸ்
உணவில் கிட்னி பீன்ஸை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மிக எளிமையாக சிறுநீரக கற்களை தடுக்க இயலும். இதில் உள்ள மெக்னீசியம் சிறுநீரக கற்களை தடுக்கும் ஆற்றல் பெற்றது. இதனை அன்றாடம் சாப்பிட்டு வரவும்.
ஆலிவ் எண்ணெய்
உணவில் மற்ற வகை எண்ணெய்களை காட்டிலும் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கூடுவதோடு கிட்னியில் சேர கூடிய கற்களையும் கரைத்து விடும்.
நீர்சத்து
சிறுநீரகத்தில் கற்கள் உருவாக மிக முக்கிய காரணி, நீர்சத்து குறைபாடே. உடலில் நீர்சத்து குறைந்தால் சிறுநீரகத்தில் எளிதாக கற்கள் உருவாகும். இதை தடுக்க தினமும் 3 லிட்டருக்கு மேல் நீரை குடித்து வாருங்கள்.