ஜியோனியின் புதிய ப்ளிப் போன் அடுத்தாண்டு வெளியாக வாய்ப்பு
சாம்சங் நிறுவனமானது சமீபத்தில் புதிதாக ஃபிளிப் போன் ஒன்றை அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் சீனா வலைத்தள பக்கத்தில் கசிந்துள்ளது.
ஜியோணி W919 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுக படுத்தப்படவுள்ளது. இந்த மாடல் ஜியோணி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த W909 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் சார்ந்த தகவல்கள் வலைத்தளத்தில் தெரியவந்துள்ளது.
ஜியோணி W919 ஸ்மார்ட்போன் பெடகோணல் வடிவமைப்பு கொண்டு மற்ற மொபைல் போன்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோணி M7 பிளஸ் ஸ்மார்ட்போன் போன்றே புதிய ஃபிளிப் போனிலும் பிரீமியம் லெதர் கோட்டிங் வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
புதிய ஜியோணி ஃபிளிப் போனில் ஒற்றை பிரைமரி கேமரா, மற்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை ஜியோணி W919 ஸ்மார்ட்போனில் 4.2 இன்ச் எச்டி 1280×720 பிக்சல் டிஸ்ப்ளே, 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்ட ஜியோணி ஃபிளிப் போன் 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த மாடல் அடுத்தாண்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.