விரைவில் பெரிய இயக்குனராக வருவார்! சிவகார்த்திகேயனை பாராட்டிய சியான் விக்ரம்!!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி தயாரித்த முதல் திரைப்படம் கனா. இந்த படத்தை அவரது நண்பர் அருண்ராஜ் காமராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் பற்றி பேசிய இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. தயாரிப்பாளர் சிவாவிற்கு நல்ல பெயரையும், லாபத்தையும் கொடுத்தது.
இந்த படத்தை பல திரைப்பிரபலங்களும் வாழ்த்திய நிலையில் கலாட்டா நிறுவனம் சகறந்த அறிமுக திரை கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதில் பங்கேற்ற விக்ரம், பேசுகையில், கனா படத்தை பற்றி கூறினார். அப்போது கனா படம் போல தயாரிக்க தனி தைரியம் வேண்டும். எங்கள் பேமிலியில் அனைவரும் சிவாகார்த்திகேயன் ரசிகர்கள். சிவா நிச்சயம் ஒரு நாள் பெரிய இயக்குனராக வருவான் எனவும் தெரிவித்தார்.
DINASUVADU