பிற மொழியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது- ஸ்டாலின்
பிற மொழியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.பிற மொழியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதால், இந்த உறுதிமொழி அவசியம். ஆட்சி கலையும் என்று நாங்கள் காண்பது கனவல்ல, அது நிஜமாக போகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.