குடியரசு தினத்தில் இசைக்க பட்ட “சங்நாதம்’ …!!
நேற்று நடைபெற்ற 70_ஆவது குடியரசு தினத்தில் “சங்நாதம்’ என்ற புதிய கீதம் ஒலிக்கப்பட்ட்து .
இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து ராணுவ அணிவகுப்பை பெற்றுக்கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 70வது குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்திய பாரம்பரிய இசையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட “சங்நாதம்’ என்ற புதிய கீதம் ஒலிக்கப்பட்ட்து . குடியரசு தின கொண்டாட்டத்தில் சென்ற ஆண்டு வரை நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின் போது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கீதமே இசைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை புதிய கீதம் இசைக்கப்பட்டது. இது நாக்புரியைச் சேர்ந்த இசைக் கலைஞர் தனுஜா நாஃப்டே என்பவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.