சரவண மீனாட்சி சரவணான இர்ஃபான்.இப்பொழுது இப்படி..!
கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக ஸ்கூல் பையனாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் இர்ஃபான்.இந்த சீரியலில் இவரின் நடிப்பு கல்லூரி, பள்ளி மாண- மாணவிகளை மிக ஈர்த்தது. இதன் பின்னர் சீரியலை விட்டு சற்று சினிமாவுக்கு வந்துவிட்டார்.
இவர் நடிப்பில் பட்டாளம் மற்றும் எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால் சுண்ணாட்டம் படமானது அவருக்கு ஓரளவிற்கு சொல்லும்படியான வெற்றியாகவே அமைந்தது.
இதன் பின் அப்படியே சீரியல் பக்கமாக திரும்பினார்.பிரபல தனியார் சேனலில் பிரபலமாக மக்களை கவர்ந்த சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் சீசன் தொடர்ந்து இரண்டாவது சீசனும் வந்தது இதில் இரண்டாவது ஜோடியில் இளம் ஹீரோவாக நடித்தார். இதிலும் பாதிலேயே விலகிய நிலையில் இதன் பின் அவருக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் போனது. இப்போது ராஜாவுக்கு செக் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்தில் நடிகரும்,இயக்குனருமான சேரன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நடிகர் இர்ஃபான் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு சினிமா துறையில் முன்னேற துடிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.