வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு….!!
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் விவசாயிகள் பயன்பெற வேண்டி தண்ணீர் திறக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தின் விவசாய பகுதிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க விட வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற நிலையில் வைகை பூர்வீக பாசன இரண்டாம் பகுதியில் உள்ள கண்மாய்க்கு பகுதி 1ல் இருந்து 4 கண்மாய்க்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது என்றும் வருகின்ற 29 ம் தேதியில் இருந்து 6 நாட்களுக்கு 184 கன அடி வரையிலான நீர்திறக்க உத்தரவிட்டபட்டிருந்ததாக அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.